Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நட்டியின் "என்கிட்ட மோதாதே"

•On March 6, 2017
main
Share
main நட்டி என்கிற நடராஜ் இந்திய சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளர். பல ஹிந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். தமிழில் நாளை படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். மிளகாய் போன்ற படங்களில் ஹிரோவாக நடுத்த இவர் சதுரங்கவேட்டை படத்தில் அனைவரது மனதையும் கவர்ந்தார். சதுரங்க வேட்டை படத்தின் மூலம் ஹிட் கொடுத்த அவர் இப்போது எங்கிட்ட மோதாதே படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான படத்துடன் வந்திருக்கிறார். புதிய இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் பாண்டியராஜின் உதவியாளர் ஆவார். மூடர்கூடம் படத்தின் ராஜாஜி, ஹிரோயானாக சஞ்சிதா ஷெட்டி மற்றும் பார்வதி நாயர் நடித்திருக்கிறார்கள். 80 களின் கால கட்டதில் ரஜினி, கமல் படங்களுக்கு பேனர் வரையும் நண்பர்களுக்கு இடையே நடக்கும் போட்டியும் அதன் மூலம் வில்லனுக்கும் இவர்களுக்கும் நடக்கும் ஆட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவ்வாரம் படம் திரைக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.