விதார்த் நுழையப்போகும் வித்தியாசமான ‘காடு’..!

நீண்ட நாளாக வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ‘ஆள்’ படம் தாமதமாக வெளியானாலும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. ‘மைனா’ என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
அதனால் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார் விதார்த். ''இந்த வெற்றியைத் தேடிக்கொடுத்த ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்'' என்று உணர்ச்சிவசப்படும் விதார்த், அடுத்ததாக தற்போது இன்னொரு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார். ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகிவரும் 'காடு' படம்தான் அது.
சக்கரவர்த்தி ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் நந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். படத்திற்கு கேகே இசையமைக்கிறார். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் சொந்த ஊரான மலைகிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
