Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய்சேதுபதியிடம் கமிஷன் : வேந்தர் மூவிசுக்கு துரோகம் செய்யும் டி.சிவா..!

•On September 22, 2014
vijay-sethupathi
Share

தமிழ்சினிமாவில் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராக ஆகிவிட்டார் விஜய்சேதுபதி. இவரது அலுவலகமும் முன்னாள் தயாரிப்பாளரும் இன்னாள் மீடியேட்டருமான டி.சிவா பணியாற்றி வரும் வேந்தர் மூவிஸ் அலுவலகமும் அருகருகே இருக்கிறது.

ஒருநாள் திடீரென விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு வந்த சிவா விஜய்சேதுபதியை புகழ்ந்துவிட்டு நம்ம வேந்தர் மூவிசுக்கு நீங்க ஒரு படம் பண்ணித்தரனும் என்று கேட்டாராம். அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி, உங்க நிறுவனத்தில் நடிக்க நான் ஆவலா இருக்கேன். எப்ப வேணும்னாலும் சொல்லுங்க என்று அனுப்பி வைத்திருக்கிறார்.

சில நாட்கள் கழிந்ததும் திடீரென ஒரு நாள் விஜய்சேதுபதியை சந்தித்து டீலிங் பேச ஆரம்பித்து இருக்கிறார் டி.சிவா. அதாவது, "நான் வேந்தர் மூவிஸ்ல உங்களுக்கு நல்ல சம்பளம் வாங்கி தர்றேன். ஆனால் நான் வாங்கி தர்ற சம்பளத்தில் நீங்க வழக்கமா வாங்குற சம்பளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை என்னிடம் கொடுத்துவிடணும் என்றாராம்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான விஜய் சேதுபதி, "கமிஷன் கொடுத்துதான் பட வாய்ப்பு வாங்கணும் என்கிற நிலைமையில் நான் இல்லை. அது மட்டுமில்ல. நான் கஷ்டப்படுற காலத்தில் கூட இப்படி கமிஷன் கொடுத்து பட வாய்ப்பு வாங்கணும்னு நினைச்சதில்லை. அதனால் தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்க என நாசுக்காக கூறி அவரை அனுப்பி வைத்தாராம்.

அதுமட்டுமல்ல.. டி.சிவா அங்கு இருக்கும் வரை வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் தருவதில்லை என்கிற முடிவையும் எடுத்துள்ளாராம். இதுபற்றிய விபரம் அறிந்தவர்கள் ஒரு நிறுவனத்தில் நல்ல வருமானத்தில் வேலைபார்த்துக்கொண்டு அதற்கு துரோகம் செய்யும் விதமாக கமிஷன் புரோக்கராக இந்த ஆளுக்கு எதற்கு இந்த ஈனப்பொழப்பு என தலையில் அடித்துக்கொள்கிறார்களாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.