விஞ்ஞானியுடன் ஜோடி சேர்ந்தார் மீரா ஜாஸ்மின்..!

இயக்குனர் லிங்குசாமி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அழகான மலையாள சண்டைக்கோழி தான் மீரா ஜாஸ்மின். இவரிடம் இருக்கும் சிறப்பம்சம் முன்னணி நடிகர்களின் படங்களை நடிக்க தானாக அலைந்து சான்ஸ் பிடிக்காதது தான்.. இதுவரை இவர் நடித்த படங்களின் பட்டியலை பார்த்தாலே அது தெரியும்.
கதையும் தனது கேரக்டரும் பிடித்துவிட்டால் வி.டி.வி.கணேஷுக்கு கூட ஜோடியாக நடிப்பேன் என இறங்கி அடிப்பவர். இப்போது ‘விஞ்ஞானி’ என்ற படத்தில் நாசா விஞ்ஞானி பார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். ‘விஞ்ஞானி’ ஒரு சைண்டிஃபிக் திரில்லர் வகையிலான திரைப்படம். ஒரு இளம் விஞ்ஞானி தந்திரமாக விரிக்கப்பட்ட திருமண வலையில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவருடைய வாழ்க்கையே மாறிவிடுகிறது. இதுதான் விஞ்ஞானியின் கதை.
ஒரு சைண்டிஃபிக் திரில்லர் வகையிலான திரைப்படம் என்றுகூட சொல்லலாம். இத்திரைப்படத்தில் அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுக்கூடங்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கும் மாணவர்களுக்கு பாடமாகவும், பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய வகையிலும் இருக்கும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
