Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய் ஆண்டனி நடிக்கும் அண்ணாதுரை பட பாடலை இலவச பதிவிறக்கம் செய்ய விஜய்ஆண்டனி டாட் காம் !

•On November 15, 2017
vjantoni
Share
vjantoni விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அண்ணாதுரை.  அவருக்கு ஜோடியாக டயனா சம்பிகா, மஹிமா நடித்துள்ளனர்.  விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் ராதா ரவி, காளி வெங்கட், ஜுவல் மேரி, நளினிகாந்த், ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் அண்டனியே செய்துள்ளார்.  தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  அருண் பாரதியின் பாடல் வரிகளில் அண்ணாதுரை உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாசன் இயக்குகிறார்.  இதன் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பாடல்கள் அனைத்தையும் விஜய்ஆண்டனி டாட் காம் http://www.vijayantony.com/ என்ற இணையதள முகவரியில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  ஒரிஜினல் தரத்துடன் கிடைக்கும்.  இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஒரு முன்னணி இசை அமைப்பாளரிள் அனைத்து பாடல்களும் இலவசம் என்பது இதுவே முதல் முறையாகும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.