Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாஜக எம்.எல்.ஏவின் காலை தொண்டர் ஒருவர் அமுக்கிய விடியோ வைரல் !

•On November 15, 2017
pjk
Share
pjk உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு தொண்டர் ஒருவர் கால் பிடித்துவிடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ ‘நந்த கோபால் குப்தா நந்தி’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் வரும் (நவம்பர்) இம்மாதம் 22ம் தேதியில் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அங்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அலகாபாத்தின் தெற்கு பகுதியில் நேற்று நந்த கோபால் குப்தா நந்தி என்ற பாஜக எம்.எல்.ஏ மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு எடுப்பதற்காக அங்கு இருந்து கட்சி அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் தனது தொண்டர் ஒருவரை கால் அமுக்கி விடும்படி கூறியுள்ளார். அந்த தொண்டர் எம்.எல்.ஏவுக்கு கால் அமுக்கிவிட்ட சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நடக்கும் போது கூடவே இன்னும் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லாமல் இருந்திருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ அந்த பாஜக எம்.எல்.ஏவுக்கு பெரும் தலைவலியாகி இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.