“விஜய்யை கிண்டல் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை”- சொல்கிறார் நட்டி

வெற்றிப்படமான ‘சதுரங்க வேட்டை’யின் கதாநாயகன் நட்டி @ நடராஜன் சுப்ரமணியனை தேடி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ய்ப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவரது அடுத்த புராஜெக்ட் எது என்றால் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 58வது படம் தன்.
ஆம் அந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நட்டியே தான். ஏற்கனவே ‘யூத்’, ‘ஜில்லா’ என இரண்டு விஜய் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்தான் நட்டி. சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர் ஒருவர், “ ‘சதுரங்க வேட்டை’ படத்தில் பாம்புக்கு இளைய தளபதி விஜய் என பெயர் வைத்திருந்தீர்களே.. அவரிடம் சென்று இதுபற்றி சொல்லி அனுமதி ஏதும் வாங்கினீர்களா” என பிரச்சனைக்கு திரி கிள்ள பார்த்திருக்கிறார்.
ஆனால் நட்டியோ, “விஜய்யை கிண்டல் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை.. அப்படி அந்த காட்சியில் உள்நோக்கம் இருந்திருந்தால் அந்தப்படத்தில் நடிக்க நான் சம்மதித்திருக்கவே மாட்டேன்.. காரணம் விஜய் எனக்கு நல்ல நண்பர்..” என அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
