கமலின் மகளாக நடிக்கிறார் விஜய்யின் தங்கை..!

கடந்த வருடம் கிறிஸ்துமஸை முன்னிட்டு கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார் என்பதும், மலையாளத்தில் ஒரிஜினலை இயக்கிய ஜித்து ஜோசப்பே தமிழிலும் இந்தப்படத்தை இயக்குகிறார் என்பதும் உறுதி செய்யப்பட செய்தி..
சமீபத்தில் பூஜை போடப்பட்ட இந்தப்படத்தில், நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் கமலின் மகளாக இடம்பெறும், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தான் கதையின் போக்கையே திசை திருப்பும் கதாபாத்திரம்.
மலையாளத்தில் மோகன்லாலின் மகளாக இந்த கேரக்டரில் அன்ஷிபா ஹாசன் நடித்திருந்தார். தமிழில் இந்த கேரக்டரில் நடிக்க நிவேதா தாமஸை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்களாம். ‘ஜில்லா’வில் விஜய்யின் தங்கையாக நடித்தாரே அவர் தான் இவர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
