விஜய்யை அசத்திய ‘ஜிகர்தண்டா’..!

கொரியன் படத்தின் தழுவலா அல்லது இரானிய படத்தின் காப்பியா என்கிற தேவையற்ற ஆராய்சசிக்கெல்லாம் டென்சன் ஆகிக்கொள்ளாமல் சூப்பர்ஹிட்டாகி இருக்கிறது கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’. மக்கள் ரசிக்கிறார்கள்.. வெற்றியும் பெற வைத்திருக்கிறார்கள்.
படமாக்கப்பட்ட நேர்த்தியை இயக்குனர்கள் மணிரத்னமும் ஷங்கரும் பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டியுள்ளார்கள். இப்போது லேட்டஸ்டாக இந்தப்படத்தை பார்த்த விஜய்யும் படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்து பார்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாது கார்த்திக் சுப்புராஜை போனில் அழைத்து பாராட்டியும் உள்ளார்..
ஏங்க.. இது ‘ரப் கட்’, ‘டர்ட்டி கார்னிவல்’ படங்களோட காப்பின்னு.. “அட போதும்யா.. அதான் படம் ஓடிருச்சே.. இதோட நிறுத்திக்குங்க...” என்று அலறலாம் போல இருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
