“‘ட்ரங்கன் மாஸ்டர்’ மூன்றாம் பாகம் தேவையில்லை” – ஜாக்கிசான்

ஜாக்கிசான் நடிப்பில் 1978ல் வெளியான ‘ட்ரங்கன் மாஸ்டர்’ படத்தை பார்த்திராத நம் இந்திய ரசிகர்கள் யாராதுவது பாக்கி இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.. அந்தப்படத்தில் இளமை துள்ளலுடன் குடித்துக்கொண்டே ஜாக்கிசான் போடும் காட்சிகள் உலக பிரசித்தம்..
அதன்பின் 1994ல் ‘ட்ரங்கன் மாஸ்டர்’ இரண்டாம் பாகத்தில் நடித்தார். அதுவும் சூப்பர்ஹிட் தான். தற்போது அதன் மூன்றாம் பாகத்தை எடுக்கலாமே என ஜாக்கிசானிடம் பலர் கேட்டு வருகிறார்களாம். சமீபத்தில் இலண்டனில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாக்கிசானே இதனை தெரியப்படுத்தினார்.
“‘ட்ரங்கன் மாஸ்டர்’ மூன்றாம் பாகம் எதற்கு..? நான் 'கராத்தே கிட்’ படத்தில் நடிக்கும்போது என்னிடம் குட்டிப்பையன் ஜேடன் ஸ்மித் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான். அதை அமர்ந்து நான் பார்த்துக்கொண்டிருந்தபோது “இது தான் ‘ட்ரங்கன் மாஸ்டர்’ பார்ட்-3 என எனக்கு மனதில் தோன்றியது. நான் தான் மாஸ்டர்.. சேடன் ஸ்மித் தான் ஜாக்கிசான்.. இனி தனியாக எதற்கு ‘ட்ரங்கன் மாஸ்டர்’ மூன்றாம் பாகம்.?” என கூறியுள்ளார் ஜாக்கிசான்.
அதேபோல இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கும் ‘ரஷ் ஹவர்’ படத்தின் நான்காவது பாகத்திலும் அவருக்கு உடன்பாடு இல்லையாம். காரணம் மோசமான ஸ்கிரிப்ட்டால் நான்காம் பாகம் என்ற பெயரில் அந்தப்படத்தை கெடுத்துவிடகூடாது என நினைக்கிறாராம் ஜாக்கி. மேலும் “எனக்கு ரஷ் ஹவர் நான்காம் பாகம் இப்போது தேவையில்லை.. உங்களுக்கு தேவையென்றால் தயவுசெய்து நல்ல கதை இருந்தால் மட்டும் என்னிடம் வாருங்கள்” என உத்தரவும் பிறப்பித்துள்ளாராம் ஜாக்கிசான்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
