“விஜய்யின் சமீபத்திய படங்களில் ‘கத்தி’ பெஸ்ட்” – மகேஷ்பாபு..!

இளைய தளபதி விஜய்க்கும் தெலுங்கு திரையுலகின் இளவரசன் மகேஷ் பாபுவுக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜெனம் பந்தம் உள்ளது போலும். பெரும்பாலும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து ஹிட்டான படங்களை மட்டுமே தமிழில் ரீமேக் செய்து நடிப்பார் விஜய். சூப்பர்ஹிட்டான ‘கில்லி’, ‘போக்கிரி’, இங்கே மட்டும் அட்டர் ஃப்ளாப் ஆன ‘ஆதி’ என மூன்று படங்களும் மகேஷ்பாபு தெலுங்கில் நடித்தவைதான்.
ஆனால் ஒருகட்டத்தில் மகேஷ்பாபு நடித்த ‘தூக்குடு’, ‘பிஸினஸ்மேன்’ ஆகிய படங்கள் அங்கே சூப்பர்ஹிட் ஆனபோதும் கூட விஜய் அவற்றை ரீமேக் செய்ய முன்வராதது ஆச்சர்யம் தான். ஒருவேளை ரீமேக் இமேஜ் தன் மீது நிரந்தரமாக விழுந்துவிடுமோ என்று அவர் நினைத்திருக்கலாம்.
சரி.. இங்கே விஜய், மகேஷ் பாபு வழியில் செல்வது மாதிரி, மகேஷ்பாபுவும் விஜய் வழியில் செல்வாரா என கேள்வி எழலாம்.. ஆனால் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய்யின் சமீபத்திய படங்களில் ‘கத்தி’ பெஸ்ட் படம் என்றும் ஆனால் அதன் ரீமேக்கில் தான் நடிக்கும் எண்ணம் இல்லைஎன்றும், காரணம் தனக்கு ரீமேக் படங்களில் நடிப்பதில் உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
