வாவ்.. ஜீவா-நயன்தாரா ஜோடி ரிட்டர்ன்ஸ்..!

2௦௦6ல் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘ஈ’ படத்தில் ஜீவா, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இணைந்து நடித்தாலும் படத்தில் இருவரும் ஜோடியில்லை என்பதுதான் விஷேச அம்சமாக அப்போது பேசப்பட்டது. காரணம் படத்தில் ‘ஈ’யாக நடித்த ஜீவாவின் கேரக்டர் அப்படிப்பட்டது.
ஆனால் எட்டு வருடங்களுக்குப்பிறகு அந்த குறையை போக்கும் விதமாக நயன்தாரா, ஜீவா இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இதற்கான ஒப்பந்தத்திலும் நயன்தாரா கையெழுத்து போட்டுவிட்டாராம். ராம்நாத் என்னும் புதியவர் இந்தப்படத்தை இயக்குகிறார். சிவா மனசுல சக்தி’ போல இதுவும் நான்ஸ்டாப் காமெடியாக இருக்குமாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமாஸ் மகாராஜாவுக்கு ஜோடியாக தமன்னா..!
