Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வருகிற ஏப்ரல் 15ல் வெளியாகும் ‘சகாவு’ திரைப்படம்

•On March 18, 2017
Aishwarya Rajesh_Nivin Pauly
Share
Aishwarya Rajesh_Nivin Pauly நிவின்பாலி ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த ‘சகாவு’ படம் ஏப்ரல்15ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் சித்தார்த் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த படம் ’சகாவு’. இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி சுரேஷ் உட்பட இன்னொருவரும் நடித்துள்ளனர். ‘சகாவு’ என்றால் மலையாளத்தில் ‘தோழரே’ என்பது அர்த்தமாம். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஒருவருக்கொருவர் ‘சகாவு’ என்றுதான் அழைப்பார்களாம். படத்தின் தலைப்புக்கு ஏற்றமாதிரி இந்தப்படத்தில் நிவின்பாலி அரசியல் தலைவர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.. இப்படி ஒரு அரசியல்வாதி நமக்கு கிடைகமாட்டாரா என மக்கள் ஏங்கும் விதமாக இவரது கேரக்டர் இருக்குமாம். இந்தப்படத்தை சித்திரை விஷு கொண்டாட்டமாக களம் இறக்குகிறார் நிவின் பாலி.. ஏப்-14ல் தான் ரிலீஸ் செய்ய முதலில் தீர்மானித்திருந்தார்.ஆனால் சித்திரை விஷு மற்றும் புனித வெள்ளி ஆகிய இரண்டு பண்டிகைகளும் ஒரே நாளில் வருவதால் அன்றைய தினம் பொதுமக்கள் தியேட்டர்களுக்கு வரமாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு அடுத்த நாள் ஏப்ரல் 15ம் தேதி வெளியிட உள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.