“குற்றம் 23” வெற்றி கூட்டணி மீண்டும் துவக்கம்!..

இப்போது தான் குற்றம் 23 படத்துக்கான சக்ஸஸ் மேடை நடத்திவிட்டு சந்தோச பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறது குற்றம் 23 படக்குழு. அவர்களுக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது.
அருண் விஜய் நடிக்க, அறிமுக இயக்குனர் அறிவழகன் இயக்க சமீபத்தில் வெளியான படம் குற்றம் 23. ஒரு போலீஸ் படமாக மெடிக்கல் கிரைம் த்ரில்லராக வெளி வந்த இந்த படத்திற்கு நிறைய பாராட்டுகளும், அருண் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரத்யேக வாழ்த்தும் கிடைத்தது.
மீண்டும் ஒரு ஹீரோவாக தன் இன்னிங்க்ஸை தொடங்க உள்ள, அருண் விஜய் மீண்டும் தாக்க தாக்க இயக்குனர் மகிழ் தமிழ்திருமேனி யுடன் இணையப்போவதாக தகவல்.இந்த சூழலில் தான், குற்றம் 23 தயரிப்பாளர் ரேதன் மூவிஸ், விநியோகிஸ்தர் அக்ராஸ் பிலிம்ஸ் இருவரும் இயக்குனர் அறிவழகனை அழைத்து இன்னும் ஒரு படம் பண்ண சொல்லியிருக்கிறார்கள் என்று படக்குளுவினர்கள் கூறியுள்ளனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
