‘லவ் பண்ணினா லைப் நல்லா இருக்குமாம்” சொல்கிறார் ஸ்வாதி..!

சின்ன கதை.. ஆனால் அதை சுவாரஸ்யமான திரைக்கதையால் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியும் என்கிற சூட்சமம் தெரிந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற மாதிரியான உணர்வை இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்
அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக உருவாகியுள்ளது “லவ் பண்ணுங்க லைப் நல்லாருக்கும்” என்கிற படம். இதில் நவ்தீப் கதாநாயகனாக நடிக்கிறார். அறிந்தும் அறியாமலும் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக இது இருக்குமாம். சுப்ரமணியபுரம் ஸ்வாதி கதாநாயகியாக நடிக்கிறார்.
நா.முத்துக்குமார், சினேகன், கானாபாலா ஆகியோர் பாடல்களை எழுத இசையமைக்கிறார் மகேஷ்சங்கர் படத்தின் கதையை எழுதி இயக்கி இருக்கும் புதுமுகம் ராஜ், ஒரு களம் மூன்று கதை என்கிற பாணியில் இத்திரைப்படத்தின் கதையோட்டம் நகரும் என்கிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
