சரத்குமாருக்கு வில்லன் அவரே தான்..!

சரத்குமாரின் வெற்றிப்பட பட்டியலை எடுத்துப்பார்த்தால் அதில் பல படங்கள் அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்களாகத்தான் இருக்கும். ‘நாட்டாமை’, ‘நட்புக்காக’, ‘சூர்யவம்சம்’ ஆகிய படங்கள் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள்.
அந்தவகையில் சரத்குமார் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக அதுவும் டபுள் ஆக்ஷன் ரோலில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘சண்டமாருதம்’. இதில் ‘எதிரியை எதிரியா பாத்து பழக்கமில்லை.. எரிச்சுத்தான் பழக்கம்” என்கிற கொள்கையை உடைய வில்லனாகவும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ராதிகா சரத்குமாரும் லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தை இயக்குவது சரத்குமாரின் ஆஸ்தான் இயக்குனர்களில் இன்னொருவரான ஏ.வெங்கடேஷ். சரத்குமாருக்கு ஜோடியாக ஓவியாவும் மீரா நந்தனும் நடிக்கிறார்கள்.
சரத்குமாரின் வெற்றிக்கூட்டணியில் எப்போதும் பங்குவகிக்கும் ஒருவரான விஜயகுமாரும் இதில் நடிக்கிறார். இது தவிர இயக்குனர் சமுத்திரகனியும், பிரபல கன்னட நடிகருமான அருண்சாகரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தில் இரண்டு ஆச்சர்யங்கள் உண்டு. ஒன்று இந்தப்படத்தின் கதையை சரத்குமாரே எழுதியிருக்கிறார். இன்னொன்று திரைக்கதை வசனத்தை பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுத ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.
As you venture through dungeons, caverns, and also old ruins, be sure to maintain an eager eye out for depository, containers, and other tonerin výrobce containers.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Postநளனும் நந்தினியும் – விமர்சனம்:
