Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லட்சுமி மேனனின் வாய்ப்பை பறித்தாரா காஜல்..?

•On December 3, 2014
Kajal_Agrawal_younger_actress
Share
லட்சுமி மேனனின் வாய்ப்பை பறித்தாரா காஜல்..? ஆம்பள படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஷாலின் அடுத்த படத்தை இயக்கப்போவது இயக்குனர் சுசீந்திரன் தான்.. ஏற்கனவே 'பாண்டியநாடு’ படத்தின் மூலம் வெற்றிக்கூட்டணி அமைத்த இவர்கள் இருவரும் இணையும் இந்தப்படம் வரும் பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது. இந்தப்படத்தின் கதாநாயகியாக லட்சுமி மேனனையே ஒப்பந்தம் செய்ய இருப்பதாக முதலில் ஒரு தகவல் வெளியானது. ஆனால் லட்சுமி மேனன் விஷாலுடன் இரண்டு படங்களில் நடித்துவிட்டதால் ஒரு மாறுதலாக இருக்கட்டும் என சுசீந்திரன் நினைத்ததால், தற்போது விஷாலுக்கு ஜோடியாக காஜல் நடிக்க இருக்கிறார்.. விஷாலும் காஜலும் இணையும் முதல் படம் இது.. தற்போது தனுஷுடன் ‘மாரி’ என்கிற படத்தில் நடித்துவரும் காஜல் அதை முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.