Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

•On January 4, 2021
Draupadhi shooting
Share

'G.M.Film Corporation' பட நிறுவனம் தயாரிக்கும் படம் "ருத்ர தாண்டவம்". இந்நிறுவனத்தின் முதல் படைப்பான "திரௌபதி" சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்தது.

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"ருத்ர தாண்டவம்" படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

திரௌபதி படத்தை வெளியிட்ட '7 G ஃபிலிம்ஸ்' சிவா இந்த படத்தையும் உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.