செபாஸ்டியன் பி.சி. 524 படத்தின் ஒரு காட்சியை வெளியிட்ட நடிகை

இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான "ராஜா வாரு ராணி வாரு" படத்தின் மூலம் அறிமுகமாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான "எஸ்ஆர் கல்யாணமண்டபம்" ஹிட் பாடல்களால் பிரபலமானது.
தற்போது அவரது மூன்றாவது படமான "செபாஸ்டியன் பி.சி. 524" பார்வையாளர்களின் அன்பை பெற தயாராகிவிட்டது. ஒரு அசலான கதையுடன் அப்படம் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி இன்று வெளியிட்டுள்ளார்.
பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிக்கும் இப்படம் மாலை கண்நோயைப் பற்றியது. நாயகன் இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார். ஒருவர் தாடியுடன் தோன்றும் அதே நேரத்தில் மற்றொருவர் க்ளீன் ஷேவ் செய்த காவல் அதிகாரியாக வருகிறார்.
இப்படத்தின் கிரண் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த ஒரு கிறிஸ்துவராக நடிக்கிறார். அதனால்தான் காட்சியின் முடிவில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள், செபா’ என்ற வாக்கியம் இடம்பெறுகிறது.
இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சாஹோ படத்துக்கு பிறகு அவர் இசையமைக்கும் நேரடி தெலுங்கு படம் இது.
கிரண் அப்பாவரம், நம்ரதா தரேகர், கோமலி பிரசாத், ஸ்ரீகாந்த் ஐயங்கார், சூர்யா, ரோஹினி ரகுவரன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
லிங்க் : https://youtu.be/vxuJwwD4o_c
படக்குழு:
எழுத்து, இயக்கம்: பாலாஜி சய்யபுரெட்டி
ஒளிப்பதிவு: ராஜ் கே நல்லி
எடிட்டிங்: விப்லவ் நிஷாதம்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: எலைட் எண்டெர்டைன்மெண்ட்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
