Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரவிகுமாருக்கு ‘லிங்கா’ என்றால் பி.வாசுவுக்கு ‘சிவலிங்கா’..!

•On December 19, 2014
sivalinga 1
Share

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘மணிச்சித்திரதாழு’ படத்தை கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் ரீமேக் செய்து ஹிட்டாக்கி, பின்னர் அதனை தமிழில் சந்திரமுகி’யாக மாற்றி ரஜினியை வைத்து பி.வாசு சாதனை நிகழ்த்திய வரலாறு நாம் அறிந்ததே..

அதேபோல மீண்டும் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தை கன்னடத்தில் ரவிச்சந்திரனை ஹீரோவாக வைத்து அதே பெயரில் ரீமேக் செய்து சூப்பர்ஹிட்டாக்கினார். இப்போது மீண்டும் கன்னடத்திலேயே தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

சிவராஜ்குமார் நடிக்கும் இந்தப்படத்தின் பெயர் சிவலிங்கா. கே.எஸ்.ரவிகுமாருக்கு ஒரு ‘லிங்கா’ என்றால் பி.வாசுவுக்குஇந்த ‘சிவலிங்கா’.. அந்த லிங்கா வரலாற்று கதை என்றால், சிவலிங்கா ஒரு சி.ஐ.டி ஆபிசரின் கதையாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.