ரசிகர்களுக்கு த்ரிஷாவின் வேண்டுகோள் !

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக த்ரிஷா நடித்து வரும் '96'. இதன் படப்பிடிப்பு சுமார் 40% வரை முடிவுற்று இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவோடு ரசிகரின் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இப்படத்துக்காக த்ரிஷா உடல் இளைத்துக் காணப்பட்ட புகைப்படம் வெளியானதால், சமூகவலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனது ரசிகர்களை எனக்குப் மிகவும் பிடிக்கும், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சந்தோஷமாக சம்மதிக்கிறேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
படத்தில் கதாபாத்திரங்களின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து முடிவெடுக்கும் இயக்குநர், அதை அவர் விரும்பும் நேரத்தில் வெளியிட வேண்டும் என நினைப்பார். எனவே அதை முன்னமே வெளியிடுவது அவருக்கு பெரிய அவமதிப்பு செய்வது போல் ஆகும். அதனால் படப்பிடிப்பு தளத்தில் என்னுடன்
எடுக்கும் புகைப்படங்களை சமுக வலைதளைங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
