Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மே15 முதல் நிபுணன் டீஸர்...

•On May 8, 2017
nibunan
Share
nibunan சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப் படுவது , அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப் பட்ட விதமும் தான். இதன் அடிப்படையில் தயாரிக்கப் பட்டு விரைவில் வெளி வர தயாராக இருக்கும் படம் தான் "நிபுணன்". பல்வேறு நட்சத்திரங்கள் குழுமி இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகன் action King அர்ஜுன். "இந்தப் படத்தின் டீசரை வருகின்ற 15 ஆம் தேதி வெளி இட உள்ளோம்.அர்ஜுன் சாரின் 150 படமாக வெளி வர உள்ள இந்தப் படத்தை நாங்கள் இந்தக் டீஸர் மூலமாக கொண்டாட இருக்கிறோம். பல ஆண்டுகள் நிறைந்த அவரது உன்னத உழைப்பையும், சீரிய முயற்சியையும் நாங்கள் பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம். அவரை தவிர இந்தப் படத்தில் உள்ள நட்சத்திர குவியலையும் இந்த டீஸர் மூலம் காணலாம். இதன் வாயிலாக ரசிகர்களும், திரை உலக வர்த்தகத்தினரும் "நிபுணன்" படக்த்தின் தரத்தை உணர்வர்."நிபுணன்" என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது.கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன். ஹோலி வுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி,அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை பூர்த்தி செய்யும் நிபுணன். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் " நிபுணன்". அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில்,நவினின் இசை அமைப்பில்,சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் நான் இணைந்து Passion ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் "என நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.