Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மே 19 முதல் உலகமெங்கும் வெளியாகும் "சங்கிலி புங்கிலி கதவ தொற"..!

•On May 8, 2017
sangili
Share
sangili சங்கிலி புங்கிலி கதவ தொற என்னடா இது வித்தியாசமான தலைப்பில் ஒரு படமா யாருடா என்று பார்த்தால் நமது M.R.ராதா அவர்களின் பேரன்தான் இப்படத்தின் இயக்குனர் ஐய்க். என்னடா இது பெயர் ஐய்க் பார்த்தால் அவரது உண்மையான பெயர் அய்யப்பன் அதை சுருக்கி ஐய்க் என்று வைத்து இருக்கிறார்.இவர் டைரக்டர் ப்ரியதர்ஷன்கிட்ட துணை டைரக்டர் ஆக பணிபுரிந்துள்ளார். இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை ஸ்ரீதிவ்யா முதன்மை கதாபத்திரதிலும். ராதிகா,தம்பி இராமையா, கோவை சரளா, பரோட்டா சூரி என்று ஒரு பட்டாளமே நடித்து உள்ள இப்படம் முழுக்க முழுக்க குடும்ப படமாக இருக்கும். மற்றும் இபடத்தை அட்லீயின் A for apple நிறுவனம் fox star ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் டீசர் இம்மாதம் வெளியுட்டனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டீசரில் ஸ்ரீ திவ்யா ஒரு காட்சியில் ஜீவாவை கட்டில் கீழே யாரோ இருக்கிறார் என்று கூறும் அந்த காட்சியில் அப்பிடியே பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த மே 19 வெளிவர இருக்கின்றது இப்படத்தினை அனைவரும் திரைஅரங்கில் சென்று பார்த்து மகிழுங்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.