"மெர்சல்" தலைப்புக்குள் மறைந்திருக்கும் ரகசியம்...

அட்லி இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் தனது 43வது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) பந்தாவாக கொண்டாட இருக்கிறார். இதனை முன்னிட்டு விஜய் 61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு நேற்று வெளியானது.
மெர்சல் என்று வைக்கப்பட்டுள்ள இந்த தலைப்பு தற்போது இணையம் முழுவது டிரெண்டாகி வருகிறது. அதோடு விஜய்யின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டியும், விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தும் சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த இந்தநிலையில் மெர்சல் படத்தில் படதலைப்பை தலைகீழாக பார்த்தால் விஜய் என்ற அர்த்தம் வருகிறது. மெர்ச்சல் என்ற டைட்டிலை தலைகீழாக படித்தால் விஜய் என்று வருமாறு படக்குழுவினர் திட்டமிட்டு இதனை வடிவமைத்துள்ளனரா? இல்லை தற்செயலாகவே இது அமைந்ததா? என்பது தெரியவில்லை.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
