Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘திருட்டுப்பயலே 2’ டீசரை வெளியிடும் நடிகை அமலா பால்.....

•On June 22, 2017
thiruttupayalye
Share
thiruttupayalye 2006-ஆம் ஆண்டு ‘திருட்டுப்பயலே’ படத்தை தயாரித்து ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் கோலிவுட்டில் என்ட்ரியானது. இதனைத் தொடர்ந்து ‘சந்தோஷ் சுப்ரமணியம், மதராசபட்டினம், யுத்தம் செய், அனேகன், தனி ஒருவன், கவண்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. தற்போது, ‘AGS’ நிறுவனத்தின் தயாரிப்பில் 19-வது படமாக ‘திருட்டுப்பயலே 2’ தயாராகி வருகிறது. ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ் மற்றும் மாளவிகா நடித்திருந்த இதன் முதல் பாகம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகையால் ‘திருட்டுப்பயலே 2’ குறித்த அறிவுப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தையும் இயக்குநர் சுசி கணேசனே இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் பிரசன்னா நடிக்கிறாராம். மேலும், விவேக், ரோபோ ஷங்கர், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இதற்கு பி.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார், ராஜாமுகமது படத்தொகுப்பாளராக பணியாற்ற்றியுள்ளார். இப்படத்தின் முதல் பார்வை டீசரை அமலாபால் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.