‘மீன் தரகர் – முன்னாள் குற்றவாளி - விஞ்ஞான கட்டுரையாளர்’ –மம்முட்டியின் புதிய முகங்கள்..!

தமிழையே ஆங்கிலத்தில் டைப் அடிக்கும் முறைக்கு தங்கிலிஷ் என பெயர் வைத்தவர்கள் தானே நாம்.. நமக்கு தங்கிலிஷ் மாதிரி மலையாளிகளுக்கு மங்கிலிஷ். ஆனால் சொல்லவந்த விஷயம் இது இல்லை.. ‘மங்கிலிஷ்’ என்ற பெயரில் தயாராகும் ஒரு படத்தையும் அதில் மம்முட்டி ஹீரோவாக நடிப்பதையும் பற்றித்தான்
இந்தப்படத்தை இயக்குகிறார் சலாம் பப்பு.. இவரது முந்தைய படமான ‘ரெட் ஒயின்’ படத்தில் மோகன்லால் தான் ஹீரோ. ‘மங்கிலிஷ்’ படத்தில் மீனவ கிராமம் ஒன்றில் மாலிக்பாய் என்கிற மீன் வியாபார தரகராக நடிக்கிறார் மம்முட்டி. அவருக்கு ஜோடியாக நெதர்லாந்தை சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்டான கரோலின் பெக் நடிக்கிறார்.
இன்னொரு படம் ‘முன்னறியிப்பு’..(முன்னறிவிப்பு தான்).. இந்தப்படத்தில் முன்னாள் குற்றவாளியாக நடிக்கிறார். இன்னொரு படத்தில் விஞ்ஞான கட்டுரைகள் எழுதும் அறிவியல் எழுத்தாளராக நடிக்கிறார். சும்மாவா..? வருடத்திற்கு ஆறு படத்தில் நடித்தால் வித்தியாசம் காட்டித்தானே ஆகவேண்டும்..!
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
