Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உத்தம வில்லனில் பூஜாவுக்கு மூன்றுவிதமான டான்ஸ்..!

•On July 17, 2014
Kamalhassan-Pooja
Share

விஷயம் தெரியாதவர்கள், அட ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த பொண்ணு என்னமா நடிச்சிருக்குது என ஆச்சர்யப்பட்டார்கள்.. விபரம் அறிந்தவர்கள் 13 வருஷத்துக்கு முன்னாடி ‘காதல் ரோஜா’ படத்தில் நடித்த அந்த அப்பாவி பொண்ணா இது.. நம்பவே முடியலையே என அதிசயித்தார்கள்..

ஆச்சர்யம்.. அதிசயம்.. அதுதான் பூஜாகுமார். ‘விஸ்வரூபம்-2’, அதற்கடுத்து தற்போது ‘உத்தம வில்லன்’ என வரிசையாக கமலின் படங்களில் கதாநாயகியாக இவர் தொடர்வது இன்னும் ஆச்சர்யம். உத்தம வில்லனில் வெஸ்டர்ன், கிளாசிக்கல், மியூசிக்கல் என மூன்று விதமான நடனம் ஆடுகிறார் பூஜா குமார்..

சிறு வயதிலேயே பூஜாகுமார் முறைப்படி நடனம் கற்றிருந்தாலும் இவர் அறிமுகமான முதல் படத்தில் கூட இவருக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லையாம்.. இப்போதுதான் அதை வெள்ளித்திரையில் பயன்படுத்தும் வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.