மழை காரணமாக யுனிவர்சிட்டி எக்ஸாம் கட்!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து அடியோடு முடங்கியது.
இந்நிலையில் தொடர் மழையால் இன்று நடைபெறவிருந்த எம்ஜிஆர் மருத்துவ பல்கழைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டப் பல்கலைக்கழக கீழ் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
