மலேசிய நடிகர், நடிகைகள் மற்றும் தமிழ் தொழில் நுட்ப கலைஞர்கள் இனைந்து உருவாக்கிய "தோட்டம்" !

"ப்ளூ ஐ புரொடக்ஷன்ஸ்" என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் "தோட்டம்". இந்த படத்தில் சிங்கை ஜெகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக தனா மற்றும் சீன நடிகை விவியாஷான் நடிக்க, இவர்களுடன் கே.எஸ்.மணியம், ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில்வர்மன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருகிறார் அரங்கண்ணல் ராஜ்.
மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவு - சதீஷ் B சரண், இசை - சாய், பாடல்கள் - நா.முத்துக்குமார், அண்ணாமலை, மாணிக்கசண்முகம், இந்த இந்த படத்தின் எடிட்டிங் பணியை - வினோத், செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் அரங்கண்ணல் ராஜ் கூறியதாவது:-
ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே.
இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும். அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப் பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே. அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது.
ஆனால் அந்த தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது. அப்படி கை மாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பதை சொல்லும் கதை தான் தோட்டம் படத்தின் கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சனையை இதில் அலசியிருக்கிறோம்.
அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ்ப்பையனுக்கும் சீனப்பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம். மேலும் இந்த படத்தை மலேசிய நடிகர் நடிகைகள் தமிழ் தொழில் நுட்ப கலைஞர்கள் இனைந்து இந்த "தோட்டம்" படத்தை உருவாக்கி உள்ளோம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
