இறுதிக்கட்ட மெருகேற்றும் பணியில் இருக்கும் "இவளுக இம்சை தாங்க முடியல" !

ரூல் பிரேக்கர்ஸ் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் தான் "இவளுக இம்சை தாங்க முடியல" . இந்த இருவரில் சக்திவேல் என்பவர் இதற்கு முன் 'கந்தகோட்டை' , 'ஈகோ' படங்களை இயக்கியவர், அவரிடம் பணிபுரிந்த வி.என். ராஜ சுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் "நான் சிவனாகிறேன்" படத்தின் நாயகன் உதய் கார்த்திக் இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இவர் அதர்வாவுடன் பரதேசி படத்திலும் நடித்தவர். சஹானா படத்தின் கதாநாயகி நடித்துள்ளார். விஜய் டிவியின் "கனாக்காணும் காலங்கள்" புகழ் சிவகாந்த் காமெடியனாக நடித்துள்ளார்.
மேலும் படத்தின் கதை முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. கோவா நகரம் அதன் தெருக்கள், சாலைகள் என45 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. மற்ற எந்தப் படமும் காட்டாத கோவாவின் பல பகுதிகளில் சிரமப் பட்டுப் படப்பிடிப்பு நட்த்தியுள்ளனர்.
இப்படம் முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் ஆதிக்கம் கொண்ட இப்படத்தில் வயதான பாத்திரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.
ஏ.வி. வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலேசியப் பாப் இசைக் கலைஞர் கேஷ் வில்லன்ஸ் இசையமைத்துள்ளார். எடிட்டிங் வெங்கட்ரமணன். இவர் 'மிருதன் 'படத்தின் எடிட்டர் . நடனம் காதல் கந்தாஸ்.
படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. பாடல்களை விவேகா மற்றும் மணி வில்லன்ஸ் எழுதியுள்ளார்கள். பாடல்களை இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் உருவாக்கியுள்ளார்கள்.
தற்போது இறுதிக்கட்ட மெருகேற்றும் பணியில் இருக்கும் 'இவளுக இம்சை தாங்க முடியல ' படம், ஜூலை இறுதியில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
https://youtu.be/dYesL8DjOtEComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
