மனைவி என்பதாலேயே ஒப்புக்கொண்ட தனுஷ்..!

இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி, திலீப் நடித்த ‘கம்மத்&கம்மத்’ என்கிற மலையாளப்படத்தில் நடிகர் தனுஷாகவே கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் நம்ம தனுஷ். கேரளா போய் கெஸ்ட் ரோலில் நடித்தவர் இங்கே தமிழில், அதுவும் தனது மனைவி இயக்கும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என்றா சொல்லிவிடுவார்.
விஷயம் இதுதான்.. ‘3’ படத்திற்குப்பின் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்தத்தை வைத்து தான் இயக்கிவரும் ‘வை ராஜா வை’ படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முக்கால்வாசி முடித்துவிட்ட ஐஸ்வர்யா, ஒரு முன்னணி நடிகர் தனது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.. அது வேறு யாருமல்ல அவரது கணவர் தனுஷ் தான். அதற்கேற்றமாதிரி தனுஷும் க்ரீன் சிக்னல் காட்டிவிட. இப்போது ரொம்பவே ஹேப்பியாகி விட்டார் ஐஸ்வர்யா..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
