“மகளைப்போல நடத்துகிறார் மிஸ்கின்” – அறிமுக நடிகை பெருமிதம்...!

மிஸ்கின் தற்போது இயக்கிவரும் ‘பிசாசு’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரயாகா. கேரளாவை சேர்ந்த இவர் படித்துக்கொண்டு இருக்கும்போதே மாடலிங்கிலும் கால் பதித்தவர். ஆனாலும் தன்னுடைய முகம் அவ்வளவாக மக்களுக்கு பரிச்சயம் ஆகிவிடக்கூடாது என்பதுதான் பிரயாகாவின் விருப்பமாக இருந்ததாம்.
ஆனால் காலம் இவரை மிஸ்கின் படத்தில் கதாநாயகி ஆக்கிவிட்டது. மிஸ்கின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு வேண்டிய நடிப்பை ஒவ்வொரு நடிகரிடம் இருந்தும் எப்படி பெற்றுக்கொள்கிறார் என்பதை ஆச்சர்யத்துடன் கவனித்தாராம் பிரயாகா. ஷூட்டிங் அனுபவம் குறித்து சொல்லும்போது, “மிஸ்கின் என்னை அவரது மகள் போல பார்த்துக்கொள்கிறார்” என பெருமையாக் சொல்கிறார் பிரயாகா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
