Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா..!

•On November 19, 2018
Andrea-Stills-1
Share

பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டபலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்றமாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சிலபடங்களை தயாரிக்கவும்  செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும்பணியாற்றி இருக்கிறார்.

ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.