இயக்குனர்களின் பாராட்டை அள்ளிய ஜானி ட்ரைலர்..!

பிரசாந்த் நடித்துள்ள ஜானி படத்தின் ட்ரைலர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் தன்னுடைய அப்பா தியாகராஜன் கதை, வசனம் மற்றும் தயாரிப்பில் ஜானி என்ற படத்தில் நடித்துள்ளார்.
சஞ்சிதா செட்டி நாயகியாக நடிக்க பிரபு, ஆனந்த ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்கள் பலரும் ட்ரைலரை பார்த்து பாசிட்டிவான கருத்துகளை கூறி வரும் நேரத்தில் இயக்குனர்கள் பலரும் பிரசாந்த்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளனர்.
மேலும் இந்த படம் நிச்சயம் உங்களுக்கு மாபெரும் வெற்றி படமாக அமையும் எனவும் கூறி வாழ்த்தியுள்ளனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
