போகன் படத்திற்கு 'யு' சான்றிதழ்

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உட்பட பலர் நடித்துள்ள படம் 'போகன்'. இப்படத்தை 'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபு தேவா தயாரிக்கிறார். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் டிரைலர் விஜய்யின் 'பைரவா' படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் இம்மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
