Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பூஜா தேவாரியாவிற்கு பதிலாக சாந்தினி தமிழரசன்

•On January 10, 2017
raja-ranguski-movie-posters
Share
raja-ranguski-movie-posters'பர்மா', ஜாக்சன் துரை' திரைப்படங்களை இயக்கியவர் தரணிதரன். இவர் தற்போது 'மெட்ரோ' புகழ் ஷிரிஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா தேவாரியா ஒப்பந்தமாகி இருந்தார். அனால் தற்போது அவருக்கு பதிலாக 'சித்து +2', 'வில் அம்பு' படங்களில் நடித்த சந்தினி தமிழரசன் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து இயக்குனர் தரணிதரன் கூறுகையில், "பூஜா தேவாரியா ஒரு அற்புதமான கலைஞர். ஆனால் எதிர்பாராத  உடல் நல குறைவால், அவருக்கு இப்போது முழவதுமாக ஓய்வு தேவைபடுகின்றது. இரண்டு மாதங்களில் 'ராஜா ரங்குஸ்கி' படத்தை முடித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை மனதில்  கொண்டு, எங்கள் படத்தின் கதாநாயகியாக சந்தினி தமிழரசனை மாற்றி இருக்கின்றோம். கடைசி நேரத்தில் எங்கள் படத்தின்  கதாநாயகியாக இணைந்த சந்தினி தமிழரசனின் அசத்தலான நடிப்பு, எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் எங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.