Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பொறியாளனுக்கு கை கொடுத்தார் வெற்றிமாறன்..!

•On August 7, 2014
Poriyaalan Press Meet Stills (8)
Share

வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்து உதயம் என்.எச்-4 படத்தை இயக்கியவர் மணிமாறன். இவர் தற்போது கதை, திரைக்கதை, வசனம் மட்டும் எழுதியிருக்கும் படம் தான் ‘பொறியாளன்’. இந்தப்படத்தை அவரது 15 வருட நண்பரான தாணுகுமார் இயக்கியுள்ளார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இயக்கிய வேல்ராஜ் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்திருக்கிறார். எம்.எஸ்.ஜோன்ஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார்.. இந்தப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் வெளியிட முடிவு செய்திருப்பதை அறிந்த வேந்தர் மூவிஸ் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வெற்றிமாறனிடமிருந்து கைப்பற்றியுள்ளது.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் வேந்தர் மூவிஸ் டி.சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாதமே படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.