Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெயர், புகழுக்கு மட்டும் தமிழ்..! பந்தா காட்டுவதற்கு தெலுங்கு..!! - நயன் வழியில் சமந்தா

•On August 7, 2014
samantha_in_eega_movie-wide
Share

இன்றிருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தின் பிசினஸ், பப்ப்ளிசிட்டி எல்லாமே அந்தப்படத்தின் முக்கிய நடிகர் நடிகைகள், இயக்குனர்களை மையப்படுத்தியே இருக்கின்றன. அப்படி இருக்கும்போது நயன்தாரா போன்று சமந்தாவும் புரமோஷன் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் செயலில் இறங்கிவிட்டார். ஆனால் அது தமிழில் மட்டும் தான்.

தெலுங்கு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சி என்றால், தமிழில் நடிக்கும் படங்களின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி என்றாலோ சொல்லவே முதல் ஆளாக ஆஜராகி விடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற ‘அஞ்சான்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கதாநாயகியான சமந்தா மிஸ்ஸிங்.

ஆனால் அஞ்சானின் தெலுங்கு பதிப்பான ‘சிக்கந்தர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வாயெல்லாம் பல்லாக கலந்துகொண்டார் சமந்தா. அசல் பல்லாவரத்து தமிழ்ப்பெண்ணான சமந்தா தமிழ்நாட்டு புரமோஷன்களில் தலைகாட்டுவதை தலைகுனிவாக நினைக்கிறாரோ என்னவோ..?

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.