பொண்ணுக்கு எதெல்லாம் பிடிக்கும்? , பிரசாந்திற்காக பட்டியல் போட்ட சங்கர் மகாதேவன்..!

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் பிரசாந்த் நடித்து வரும் படம் ‘சாஹசம்’.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பாடல் பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமன் இசையமைக்கும் இந்தப்படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் மும்பையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
கபிலன் எழுதிய இந்தப்பாடலில் “பட்டுசேலை வாங்கி தந்தா பொம்பளைக்கு புடிக்கும்.. அத கட்டி உட சொல்லி கேட்டா ஆம்பளைக்கு புடிக்கும்...” என ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னன்ன பிடிக்கும் என ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கிறார்கள். பிரசாந்திற்காக சங்கர் மகாதேவன் பாடிய இந்தப்பாடல் மும்பையில் சமீபத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டபோது பாடல் முடிந்ததும் பிரசாந்த் அப்படியே மகிழ்ச்சியால் சங்கர் மகாதேவனை கட்டி தழுவினாராம்.
பிரசாந்தின் தந்தையும், இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான தியாகராஜன் ஏற்கனவே இன்றைய இளசுகளின் இசை சுனாமியாக திகழும் அனிருத் மற்றும் நடிகை லட்சுமி மேனன், ஆண்ட்ரியா இந்தியாவின் சிறந்த பாடகர்களான மோஹித் சவ்ஹான், ஹனிசிங், அர்ஜித் சிங் ஆகியோரையும் இந்தப்படத்தில் பாட வைத்துள்ளார்.
 ,
 ,
 ,
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
