பொங்கலுக்கு பட்டா போடப்படும் ‘புறம்போக்கு’..!

‘சிகரம் தொடு’ படத்தை தொடர்ந்து யுடிவி நிறுவனம் மிகுந்த முனைப்பு காட்டி தயாரித்து வரும் படம் தான் ‘புறம்போக்கு’. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் என மூவர் கூட்டணியுடன் கதாநாயகியாக கார்த்திகா நடிக்கும் இந்தப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். ஆற அமர மூன்று வருஷத்துக்கு ஒரு படம் தந்தாலும் சும்மா ‘கில்லி’ மாதிரி தருவார் ஜனநாதன்.
தற்போது உருவாகி வரும் ‘புறம்போக்கு’ம் அந்தவகையில் சொல்லி அடிக்கும் கில்லி என்றே தெரிகிறது. கிட்டத்தட்ட படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் படத்தை பொங்கல் தினமான ஜனவரி-15ஆம் தேதி வெளியிட யுடிவி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அதன் செயல் அதிகாரி தனஞ்செயன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
