பெட்ரோல் தட்டுப்பாட்டில் சிக்கிய பெண் இயக்குனர்..!

‘ஆரோகணம்’ படத்தை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிவரும் படம் தான் ‘நெருங்கி வா.. முத்தமிடாதே’. சாலை பயணத்தை மையமாக வைத்து அவர் இயக்கிவரும் இந்தப்படத்தில் ஒரு லாரியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது.
வழக்கமாக திருச்சியில் இருந்து காரைக்கால் செல்ல மூன்றரை மணி நேரம் பிடிக்கும். ஆனால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருதினத்தின்போது அதில் சிக்கிய சிலர் ஒரு லாரியில் தொற்றிக்கொண்டு கிட்டத்தட்ட 14 மணி நேரம் பயணம் செய்கின்றனர்.. அவர்கள் யார், இடையில் பயணத்தின்போது அவர்களுக்கு ஏற்படும் சில அசாதாரண நிகழ்வுகள் ஆகியவற்றை வைத்து விறுவிறுப்பாக கதை பின்னியிருக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
