கன்னடத்தில் அடியெடுத்து வைக்கிறார் ரம்யா நம்பீசன்..!

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரு முக்கியமான நடிகை ரம்யா நம்பீசன்.. தமிழில் ‘பீட்சா’ படத்திற்குப்பின் இவருக்கு ஏறுமுகம் தான். அதுதவிர நல்ல குரல் வளம் உள்ளவர் என்பதால் இரண்டு மொழிப்படங்களிலும் தொடர்ந்து பாடியும் வருகிறார்.
இப்போது முதன்முதலாக ஒரு கன்னடப்படத்தில் நடிக்கிறார் ரம்யா. பி.சி.சேகர் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஸ்டைலிஷ் ஸ்டார் கணேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரம்யா. இதில் ரம்யாவுக்கு மாடர்ன், ஹோம்லி என இரண்டு முகங்களாம்...
அதேபோல வாய்ப்பு கிடைத்தால் கன்னடத்திலும் பாடுவதற்கு தயார் என்றும் சொல்கிறார்.. ஒருபக்கம் கன்னட மொழிதான் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமமாக இருப்பதாகவும் ஆனால் இசைக்கு ஏது மொழி பேதம்.. அதனால் நன்றாகவே பாடுவேன் என்றும் உறுதியுடன் சொல்கிறார் ரம்யா நம்பீசன்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
