Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புதுமுக இயக்குநர் - ஜி.வி.பிரகாஷ் இணைந்து அசத்தும்"செம"...

•On March 9, 2017
G.V.Prakash-647x400
Share
G.V.Prakash-647x400 புதுமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு"செம"என தலைப்பிட்டுள்ளார்கள்.ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள'ப்ரூஸ்லீ'படத்தை மார்ச் 17-ம் தேதி வெளியிட அப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வருகிறார். அதில் பாண்டிராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படமும் ஒன்று. இதனை பாண்டிராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வள்ளிகாந்த் இயக்கி வந்தார். தன்னுடைய நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக உருவாக்கி பாண்டிராஜிடம் கூற அவருக்கு மிகவும் பிடித்துவிடவே இப்படத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார்.ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இப்படத்திற்காக இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்துவந்த இப்படத்துக்கு தற்போது அப்படக்குழு "செம"என தலைப்பிட்டுள்ளது. அர்த்தனா, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இருவரும் இணைந்து அசத்தும்"செம"படம் விரைவில் திரைக்கு வந்து அசத்தவிருக்கிருது...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.