Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘புதிய படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை” – அமலாபால்

•On July 22, 2014
amala-paul-latest-photo-shoot-5
Share

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அமலாபாலின் அமைதியான நடிப்புக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிகின்றன. தொடர்ந்து வாய்ப்புகளும் தேடிவரத்தான் செய்கின்றன. ஆனால் அமலாபால் தான் எதற்கும் ‘எஸ்’ சொல்லவில்லை... ஏற்கனவே மலையாளத்தில் ஒப்பந்தமான இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஒன்று சூப்பர்ஹிட்டான ‘ட்ராஃபிக்’ படத்தை இயக்கிய ராஜேஸ் பிள்ளை இயக்கிவரும் ‘மிலி’. மற்றொன்று மோகன்லாலுடன் லைலா ஒ லைலா’. இதில் ‘மிலி’ படத்தில் பெயரளவுக்கு கதாநாயகி என்றில்லாமல், கதையின் நாயகியாகவும் நடிக்கிறார் அமலாபால். முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப்படத்தில் அமலாபாலுக்கு ஜோடியாக சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார் ‘நேரம்’ புகழ் நிவின் பாலி.

இது தவிர ஏற்கனவே தெலுங்குல அவர் நிராகரிச்ச ‘வஸ்தா நீ வேணுகா’ங்கிற படத்தோட தயாரிப்பாளர் திரும்பவும் அமலாபாலை தேடி வந்து பாத்திருக்கிறாராம். ஆனா முந்தைய படத்துக்காக இல்லையாம். அதை அவர் ட்ராப் பண்ணிட்டாராம். புதிய படத்துக்குத்தான் அமலாபாலை தேடி வந்தாராம். ஆனா இதுவரைக்கும் அவருக்கு சம்மதம் சொல்ற மாதிரி எந்த பதிலையும் சொல்லலையாம் அமலாபால்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.