ஜிகர்தண்டா தள்ளிப்போனதின் பின்னணியில் தனுஷ்..!

‘ஆடுகளம்’ படத்தை தயாரித்த கதிரேசன் தான் ‘ஜிகர்தண்டா’ படத்தையும் தயாரித்துள்ளார்.. தனுஷுக்கு நண்பரும் கூட.. கடந்த வெள்ளியன்று வெளியான தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போ ஜிகர்தண்டாவை ரிலீஸ் செய்தால் என்ன ஆகும்..? ‘வேலையில்லா பட்டதாரி’ ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறையும்.. அப்படியே வசூலும் குறைய ஆரம்பிக்கும்..
சூப்பர்ஹிட்டாக ஓடும் ஒரு படத்தின் வசூல் குறைய தன் படம் தடையாக இருக்க கதிரேசன் விரும்பவில்லை.. மேலும் ‘ஜிகர்தண்டா’வை இப்போது ரிலீஸ் செய்தால் தனுஷ் படம் ஓடுவதை முன்னிட்டு குறைவான தியேட்டர்கள் தான் கிடைக்கும்.. அதனால் தன் ‘ஜிகர்தண்டா’வை ஆகஸ்ட்-1ஆம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டதாக கதிரேசனே கூறியுள்ளார். இரண்டு படங்களுக்குமே நல்லதுதான் செய்திருக்கிறார் கதிரேசன்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
