Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிக்பாஸ் ஜூலி நடிக்கும் "DR.S.அனிதா MBBS" திரைப்படத்தின் பூஜை இன்று பாடல் பதிவுடன் தொடங்கியது..!

•On June 23, 2018
DSC_3810 (FILEminimizer) - Copy
Share
இயக்குனர் அஜய் இயக்கத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்கும் "DR.S.அனிதா MBBS" திரைப்படதின் பூஜை இன்று பாடல் பதிவுடன் தொடங்கியது, இத்திரைப்படத்தை  Runhorse நிறுவனம் சார்பில்  அஜய் மற்றும் RJ மீடியாவும்  இணைந்து தயாரிக்கிறது, பல ஹிட் பாடல்களை கொடுத்த திரு.S.தீணா இசை அமைத்துள்ள  இத்திரைப்படத்திற்கு செல்வா ஒளிப்பதிவாளராகவும் P.C.மணிவர்மா கலைஇயக்குநராகவும் மேலும் ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர்.இப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் வர்ஷாவும் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்படத்தில் மாணவி  அனிதா கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் நடிகை ஜூலி நடிக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் அஜய் கூறுகையில் - இந்த படத்தில் நாயகியாக  ஜூலியை  நடிக்கவைக்க  பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இத்திரைப்படத்தை பார்த்தபிறகு அவர்கள் கூறியது தவறு என்று உணர்வார்கள்.வணிக ரீதியான வெற்றிக்காவோ பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தை நான் இயக்கவில்லை.மருத்துவ படிப்பு படிக்கச் முழு தகுதி இருந்தும் நம் கல்வி முறைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வுமுறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்ற நோக்கமே காரணம்.இத்திரைப்படம் தேசிய விருதை கண்டிப்பாக வாங்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.இப்படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் ஆய்வுகூடம் படத்தின் நாயகன் ராஜ கணபதி நடிக்கவுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.