Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாலிவூட்டில் அறிமுகமாகும் தமன்...

•On May 16, 2017
thaman
Share
thaman தென்னிந்திய இசையமைப்பாளரான தமன் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். பிரபல பாலிவுட் மாஸ் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'கோல்மால் 4' திரைப்படத்தில்தான் முதல் இசையமைக்கிறார். அதாவது கடந்த 2008ஆம் ஆண்டு 'சிந்தனை செய்' எனும் தமிழ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தமன், தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தமிழ் - தெலுங்கு திரையுலகில் பிரபலமான தமன், தற்போது பாலிவுட்டில், அஜய் தேவ்கன், ப்ரணீதா சோப்ரா, தபு, நீல் நிதின் முகேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கோல்மால் 4' படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜய் தேவ்கன் மற்றும் ரோஹித் ஷெட்டி இணைந்து தயாரித்து வரும் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.