Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திரையரங்குகள் மூடப்படாது - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு...

•On May 16, 2017
sangam
Share
sangam தமிழகத்தில் வரும் மே 30.5.2017 தேதி முதல் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மையல்ல. அந்த செய்திகளை நம்பவேண்டாம் வழக்கம்போல் தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று தமிழக திரைப்பட திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு R.பன்னீர்செல்வம் சென்னை நகர திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அபிராமி ராமநாதன், கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவருமான திரு. திருப்பூர் சுப்புரமணியம். திருச்சி தஞ்சாவூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் திரு ஜோசப் பிரான்ஸிஸ் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் திரு பிரதாப் வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. G.சீனிவாசன், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.R.செல்வின்ராஜ் ஆகியோரின் கையெப்பத்துடன் இந்த கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் சென்னை செங்கல்ப்பட்டு திருவள்ளூர் - அருள்பதி (தலைவர்), ஜெய்குமார் (செயலாளர்) கோயம்புத்தூர் - ராஜமன்னார் (தலைவர்), சிவராமன் (செயலாளர்) மதுரை - R.செல்வின்ராஜ் (தலைவர்), ஷாகுல் அமீத் (செயலாளர்) திருநெல்வேலி - மணிகண்டன் (செயலாளர்) திருச்சி - ரவிச்சந்திரன் (செயலாளர்) வேலூர் - பாலாஜி (தலைவர்) சேலம் - முருகேசன் (தலைவர்) பாண்டிச்சேரி - லோகு (தலைவர்) வட ஆற்காடு - பாலாஜி (தலைவர்), டில்லிபாபு (செயலாளர்)...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.