பாரம்பரியமான உடையில் ஒரு முதல்வர் !

கொரட்டல்ல சிவா இயக்கும் "பாரத் அனே நேனு" என்ற படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு. அரசியல் கதையில் தயாராகும் இந்த படத்தில் ஆந்திரா முதலமைச்சராக நடித்துள்ளார் மகேஷ்பாபு.
அப்படி அவர் முதல்வராக நடிக்கும் காட்சிகளில் அதிரடியான அரசியல் பஞ்ச் டயலாக்குகள் பேசியிருப்பதோடு ஆந்திராவின் பாரம்பரிய உடையில் தோன்றி நடித்துள்ளார் மகேஷ்பாபு. உகாதி பண்டிகையையொட்டி நேற்று இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு பாரம்பரிய உடையணிந்து மகேஷ்பாபு நடித்த முராரி, போக்கிரி படங்கள் சூப்பர் ஹிட்டாகின. அதனால் இந்த படமும் அந்த ஹிட் பட வரிசையில் இடம்பெறும் என்று மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இணையதளங்களில் கருத்து சொல்லி வருகிறார்கள். "பாரத் அனே நேனு" படம் ஏப்ரல் 20-ந்தேதி திரைக்கு வருகிறது.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
