தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!


ஜீன்-22 , தளபதி விஜய் அவர்களின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி மாவட்ட முடிச்சூர் பகுதி இளைஞரணி மற்றும் வரதராஜபுரம் பகுதி இளைஞரணி தலைமை சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பொதுமக்களுக்கு குடங்கள் ,ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வண்டியும் மற்றும் சிறப்பான அன்னதானமும் தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு.புஸ்ஸி N.ஆனந்த் (EX MLA) அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
காஞ்சி மாவட்ட இளைஞரணி மாவட்டம் ஒன்றியம் நகரம் பகுதி வார்டு இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அதேபோல் தென் சென்னை மாவட்டம் விருங்கம்பாக்கம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மன்ற தலைவர் வேல்முருகன் ,சண்முகம் ,பாலாஜி ஆகியோரின் ஏற்பாட்டின் கீழ் சத்யா நகர் பகுதி சூளைப்பள்ளம் பகுதியில் 3 கிளைமன்றங்கள் திறக்கப்பட்டது.
இதில் பொதுமக்களுக்கு 60 குடங்கள் மற்றும் ,100 குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் மற்றும் 120 குழந்தைகளுக்கு பேனா ,பென்சில்கள் ஆகியவை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N.ஆனந்த் (EX MLA ) அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு மற்றும் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
